28 ஏப்., 2010

கிரிக்கெட் வாரியத்திலிருந்த ஐபிஎல் டிவி ஒளிபரப்பு உரிமை ஆவணங்கள் மாயம்- பதுக்கியது யார்?

1.64மில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஎல் போட்டிகளை நேரடியாக டிவியில் ஒளிபரப்பு செய்யும் உரிமை தொடர்பான ஒப்பந்த ஆவணங்கள் கிரிக்கெட் வாரிய அலுவலகத்திலிருந்து மாயமாகியுள்ளது.

கிரிக்கெட் வாரியம், சோனி டிவியின் மல்டி ஸ்கிரீன் மீடியா மற்றும் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குழுமத்திற்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் இது.

80 மில்லியன் டாலர் பணம் லஞ்சமாக கைமாறியதாக இந்த ஒப்பந்தம் குறித்து சர்ச்சை உள்ளது. தற்போது இந்த ஒப்பந்த ஆவணங்கள் கிரிக்கெட் வாரியத்திடமும் இல்லை. சஸ்பெண்ட் செய்யப்பட்ட லலித் மோடியிடமும் இல்லையாம்.

2009ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமை தொடர்பான ஒப்பந்தம் இது. முதலில் கடந்த 2008ம் ஆண்டு 1.02 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் இதை கிரிக்கெட்வாரியம் ரத்து செய்து விட்டது. பின்னர் 2009ம் ஆண்டு மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டது.

மிகப் பெரிய தொகைக்குப் போடப்பட்ட ஒப்பந்தமான இதன் ஆவணங்கள், பத்திரமாக பாதுகாத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவ்வளவு அஜாக்கிரதையுடன் கிரிக்கெட் வாரியமும், ஐபிஎல்லும் இருந்திருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

காணாமல் போன இந்த ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தம் உருவாவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் மோடிதான் முக்கிய பங்காளராக கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

இந்த ஆவணம் தவிர, மோடியின் வளர்ப்பு மருமகன் கெளரவ் பர்மனுக்கு பங்குகள் உள்ள எலிபன்ட் கேபிடல் நிறுவனத்திற்குச் சொந்தமான குளோபல் கிரிக்கெட் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு டிஜிட்டல், இமேஜ் உரிமைகள் கொடுக்கப்பட்டது தொடர்பான ஒப்பந்தமும் காணவில்லையாம்.

டிவி ஒளிபரப்பு தொடர்பான ஒப்பந்த்த்திற்குப் பின்னர் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்திற்கு ரூ. 125 கோடி லஞ்சமாக வழங்கியதாக சமீபத்தில் அதன் இந்தியத் தலைவர் வேணு நாயர் வாக்குமூலம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்த ஆவணங்கள் காணாமல் போயிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கிரிக்கெட் வாரியத்திலிருந்த ஐபிஎல் டிவி ஒளிபரப்பு உரிமை ஆவணங்கள் மாயம்- பதுக்கியது யார்?"

கருத்துரையிடுக