28 ஏப்., 2010

விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடுதழுவிய பாரத் பந்த் தமிழகத்தில் தோல்வி

விலைவாசி உயர்வைக் கண்டித்தும், நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குறை கூறியும் இடது சாரி கட்சிகள் மற்றும் அவற்றின் தோழமைக்கட்சிகள் அகில இந்திய அளவில் இன்று நடத்திய 12 மணிநேர பாரத் பந்திற்கு தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பில்லை.

பஸ்கள், ரயில்கள் வழக்கம் போல ஓடின. சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இடதுசாரி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் தங்கள் ஆட்டோக்களை இயக்கவில்லை ஆங்காங்கே சில கடைகள் மூடப்பட்டிருந்தன.

தொழில் நகரமான கரூர் போன்ற இடங்களில், மின் வெட்டு காரணமாக பாதிக்கப்பட்ட தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

ஓரிரு இடங்களில் சில வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படியாக பாதிப்பு எதுவும் இல்லை.

இடதுசாரிகளின் ஆட்சியில் உள்ள் சில மாநிலங்களில் முழுமையான கடையடைப்ப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
source:BBC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடுதழுவிய பாரத் பந்த் தமிழகத்தில் தோல்வி"

கருத்துரையிடுக