14 ஏப்., 2010

கிங்ஃபிஷர் விமானத்தில் வெடிக்குண்டு: சி.பி.ஐ விசாரணைத்தேவை -பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

திருவனந்தபுரம்:கிங்ஃபிஷர் விமானத்தில் குண்டுவைத்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கோரி கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியது.பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து உரைநிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரள மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது தனது உரையில்,"கிங் ஃபிஷர் விமானத்தில் குண்டுவைத்த செய்தி வந்தவுடன் போலீசாரும், பத்திரிகைகளும் இச்சம்பவத்திற்கு பின்னால் ஹிஸ்ப் தீவிரவாதிகள் என்றும், இவர்கள் தாவூத் இப்ராஹீமின் கூட்டாளிகளென்றும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் உண்மையான குற்றவாளி ராஜசேகரன்நாயர் என்ற தகவல் புலனாய்வில் வெளியானவுடன் இவர்கள் ஓடி ஒளிந்துவிட்டனர்.

குற்றவாளி நாயர் என்றவுடன் வைத்தது பாம்ப் சாதாரண குண்டு என்று மாறியது. ராஜசேகரன் நாயருக்கு தீவிரவாத தொடர்பு இல்லை என்றும், ஒரு வழக்குக்கூட இவர் மீது இல்லை என்று சங்க்பரிவாரைச் சார்ந்த ராஜசேகரன் நாயரை பரிசுத்தவனாக்க போலீஸ் முயற்சியை துவங்கியது.

திருவனந்தபுரம் மணக்காட்டைச் சார்ந்த முஹ்சின் என்பவரை லைட்டர் பாம்ப் தயாரித்தார் எனக்குற்றஞ்சாட்டி ஒன்றரை மாத காலம் சித்திரவதைக்கு ஆளாக்கிவிட்டு பின்னர் ராகேஷ் சர்மாதான் காரணம் என தெளிவானதும் ராகேஷ் ஒரு மன நோயாளி எனக்கூறி அவரை தப்பிக்க வைத்தது போலீஸ்.

குற்றவாளியின் ஜாதியையும், மதத்தையும் உற்றுநோக்கிய இரட்டை நீதித்தான் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தீவிரத்தன்மை போதாது எனக்கூறி நரேந்திரமோடியிடமிருந்து பெற்ற ஊக்கத்தால் துவக்கப்பட்ட ஹரித்துவார் மித்ரா மண்டல் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர்தான் ராஜசேகரன் நாயர் என்ற விபரம் தெளிவான பின்னரும் அதனை முக்கிய பத்திரிகைகள் மறைத்துவிட்டன. பத்திரிகைகளுக்கு பொய்க்கதைகளை வழங்குவது சங்க்பரிவார் ஆதரவாளர்களான போலீசாராவர்." இவ்வாறு அவர் கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினரான பேராசிரியர் பி.கோயா உரையாற்றுகையில், "கேரளாவில் தீவிரவாத வழக்கினை விசாரிக்க வந்த தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) அப்ரூவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மலேகான், நந்தத், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் ஒரே நோக்கத்தைக் கொண்ட அமைப்புகள்தான் செயல்பட்டுள்ளன என மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் முன்னாள் ஐ.ஜியான் எஸ்.எம்.முஷ்ரிஃப் மும்பை தீவிரவாதத்தாக்குதல் தொடர்பாக எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த வெடிக்குண்டு வெடிப்புகளைக் குறித்து தற்ப்பொழுது விசாரணை நடப்பதில்லை. இந்நாட்டில் முஸ்லிம், தலித், ஆதிவாசி சமூகங்களுக்கிடையேயான புதிய விழிப்புணர்வு ஆட்சியாளர்களை கோபமூட்டியுள்ளது. மனித உரிமை மீறல்களுக்காக போராடக்கூடியவர்களை தீவிரவாத முத்திரைக் குத்துகிறது அரசு. நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தத்தான் ராஜசேகரன் நாயர் கிங்ஃபிஷர் விமானத்தில் குண்டுவைத்தார் என புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள்." இவ்வாறு அவர் உரையாற்றினார்.

நூற்றுக்கணக்கான நபர்கள் கலந்துக்கொண்ட கண்டனப்பேரணி பாளையத்திலிருந்து துவங்கி வெட்டிமுறிச்ச கோட்டையில் நிறைவுற்றது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கிங்ஃபிஷர் விமானத்தில் வெடிக்குண்டு: சி.பி.ஐ விசாரணைத்தேவை -பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா"

கருத்துரையிடுக