வாஷிங்டன்:அணிசேரா நாடுகளின்(NAM) பிரதிநிதிகளுக்கு அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் அளித்த மதிய விருந்தில் அணிசேரா நாடுகள் கூட்டமைப்பின் ஸ்தாபக நாடான இந்தியாவை அமெரிக்க அழைக்காமல் புறக்கணித்தது.
அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் தொடர்புடைய அணிசேரா நாடுகளின் பிரதிநிதிகளை மட்டுமே இவ்விருந்தில் கலந்துக்கொள்ள அழைப்புவிடுத்ததாகவும், இந்தியா அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடாததால் அழைக்கவில்ல என வெள்ளை மாளிகை கூறுகிறது.
அணுசக்தி பாதுகாப்பு, அணு ஆயுத பரவல் ஆகியவைத் தொடர்பாக தனது நாட்டின் நிலைப்பாடும் அணிசேரா நாடுகளின் நிலைப்பாடும் நெருங்கிய ஒன்று என விருந்தளித்து உரை நிகழ்த்திய ஜோ பைடன் தெரிவித்தார். அணு ஆயுதம் இல்லாத பாதுகாப்பான உலகை உருவாக்குவதில் ஒபாமா அரசு உறுதிப்பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விருந்து நிகழ்ச்சியில் சிலி வெளியுறவுத்துறை அமைச்சர் ஆல்ஃப்ரடோமொரினோ சார்மே, சவூதி ஜெனரல் இண்டலிஜன்ஸ் தலைவர் இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத், அல்ஜீரியா வெளியுறவு அமைச்சர் மொராத் மெடல்சி, எகிப்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் அபுல்கைத், தாய்லாந்து துணைபிரதமர் ட்ரிரோங் சுவாங்கிரி, இந்தோனேசியா துணை அதிபர் போடியானோ, மலேசியா பிரதமர் நஜீப் அப்துற்றஸ்ஸாக், தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் மைதே நொகோனா மஷாபனே ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "அணிசேரா நாடுகளின் விருந்து நிகழ்ச்சிக்கு இந்தியாவை புறக்கணித்த அமெரிக்கா"
கருத்துரையிடுக