வாஷிங்டன்:ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பாரிகாரம் காண்பதற்காக அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த திட்டமிடும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொள்ளவில்லை.
அணு சக்தி பாதுகாப்பு உச்சிமாநாட்டிற்கிடையே அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவோடு நடைபெற்ற சந்திப்பின்போது மன்மோகன் சிங் இந்தியாவின் எதிர்ப்பை தெரிவித்தார். தடை அரசு நிறுவனங்களை பாதிக்காது, மாறாக அந்நாட்டின் சாதாரண குடிமக்களைத்தான் அதிகம் பாதிக்கும். ஆதலால் நினைத்த பலனை இதன்மூலம் அடையமுடியாது என்று மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார்.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு என்ற நிலையில், பயன் தரத்தக்கவகையில் அணுசக்தியை பயன்படுத்த ஈரானுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால் ஈரானின் அணுஆயுத மோகத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என மன்மோகன்சிங் தெரிவித்தார்.
ஈரானுக்கெதிராக நான்காவது ஐ.நா தடையை ஏற்படுத்த அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டிற்கிடையே ஆதரவை தேட முயற்சித்தார், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈரான் அணுசக்தி விவகாரம்:தடை தீர்வல்ல- இந்தியா"
கருத்துரையிடுக