புதுடெல்லி:கொச்சி ஐ.பி.எல் அணி தொடர்பாக லலித் மோடியுடனான மோதல் நிலைநிற்கவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சசி தரூருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
கொச்சி ஐ.பி.எல் அணியிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் லலித் மோடியிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்பதே தரூருக்கு வந்த மிரட்டல் செய்தி. இந்த மிரட்டல் தாவூத் இப்ராஹீம் கும்பலிலுள்ள ஷக்கீலிடமிருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனை பத்திரிகைகளும் பெரிதாக வெளியிட்டன.
இம்மிரட்டல் தொடர்பாக சசிதரூரின் சிறப்பு பணி அதிகாரி ஜோசப் ஜேக்கப் உள்துறை அமைச்சகத்திடமும், போலீசாருக்கும் தகவலை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி ஸ்பெஷல் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சில மணிநேரங்களில் டெல்லி திலக் நகரைச் சார்ந்தவரும், பாராளுமன்ற கிளப்பில் ஜிம் பயிற்சியாளருமான மாணிவர்மா என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மந்திர்மார்கில் வைத்து அவரை போலீசார் கைதுச் செய்தனர்.இவரிடம் நடத்திய விசாரணையில் நிழலுக தாதாக்களுடன் இவருக்கு தொடர்பில்லை எனவும், சசி தரூரை இவருக்கு ஏற்கனவே தெரியுமென்றும் போலீசார் தெரிவித்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சசி தரூருக்கு கொலைமிரட்டல் அனுப்பியவர் கைது"
கருத்துரையிடுக