மானோக்வாரி:இந்தோனேசியாவில் பயணிகள் விமானம் நொறுங்கி 20 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தோனேசியாவின் மேற்கு பாபுவா மாகாணத்தில் மானோக்வாரி விமான நிலையம் அருகே மெர்பாடி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 737 போயிங் விமானம் இன்று பகல் நேரத்தில் தரையிறங்க முற்பட்டது.
சோரங் என்ற இடத்தில் இருந்து மானோக்வாரி விமான நிலையத்துக்கு 103 பயணிகளுடன் வந்தது அந்த விமானம். அப்போது ஓடுதளத்தில் தவறுதலாக மரம் ஒன்றின் மீது விமானத்தின் இறக்கை பகுதி இடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நிலைதடுமாறிய அந்த விமானம், ஓடுதளத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சென்று விழுந்தது. இதில் விமானத்தின் நடுப்பகுதி பாதியாக உடைந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் அலறினர். பின்னர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர்.
இதில் 20பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
source:thatstamil

0 கருத்துகள்: on "விமானம் விழுந்து நொறுங்கி 20 பேர் காயம்"
கருத்துரையிடுக