ஸ்ரீநகர்:இஸ்லாமிய தொலைக்காட்சி சானல்களை தடை செய்ததற்கெதிராக கஷ்மீரில் கடும் எதிர்ப்பு கிளமியுள்ளது.
பீஸ் டி.வி, குர்ஆன் டி.வி, நூர் டி.வி ஆகியவற்றுடன் பாகிஸ்தான் சானல்களான பி.டி.வி, ஹோம், ஜியோ டி.வி, டான் டி.வி உள்ளிட்ட 12 சானல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதம் என்ற கூறி கேபிள் டி.வி சட்டத்தின்படி தடைச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு டிவிஷன் கமிஷனர் பவன் கோட்வல் கூறுகிறார்.
பாபா ராம்தேவ், அஸாராம் சானல்களுக்கும், ஜெயின் டி.விக்கும் ஏற்படுத்தாத தடை இஸ்லாமிய சானல்களுக்கு மட்டும் ஏற்படுத்தியது கண்டனத்திற்குரியது என்று அஞ்சுமனே இமாமியா பொதுச்செயலாளர் ஸய்யித் ஃபிதா ஹுஸைன் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கஷ்மீரில் இஸ்லாமிய தொலைக்காட்சி சானல்களுக்கு தடை"
கருத்துரையிடுக