புதுடெல்லி:குஜராத் இனப்படுகொலைத் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்புபுலனாய்வுக் குழுவின் இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளை மறு உத்தரவு வரும் வரை நீக்குமாறு எஸ்.ஐ.டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்புப்புலனாய்வுக் குழுவிற்கெதிராகவும், அதன் உறுப்பினர்களுக்கெதிராகவும் ஏராளமான குற்றச்சாட்டுகளுடனும், பத்து இனப்படுகொலை வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்றும் கோரி செண்டர் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் என்ற அமைப்பு சமர்ப்பித்த மனுவை பரிசீலனைச் செய்த நீதிபதிகள் கெ.ஜெயின், பி.சதாசிவம், அஃப்தாப் ஆலம் ஆகியோரைக் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் மேற்கண்ட உத்தரவை வழங்கியது.
இடைக்கால தடையைக் குறித்து இந்த மாதம் 19-ஆம் தேதி விசாரணை நடக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா ஆகிய இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளைத் தான் உச்சநீதிமன்றம் நீக்க உத்தரவிட்டது.
தங்களின் வாதங்களைக் கேட்காமலேயே தங்களை எஸ்.ஐ.டியிலிருந்து மாற்றியதாக சிவானந்த் ஜா நீதிமன்றத்தில் தெரிவித்தார். வழக்கு நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை தங்களிடமோ குற்றஞ் சாட்டப்பட்டவர்களிடமோ அல்லது அது சம்பந்தமான கட்சிக்காரர்களிடமோ அளிக்கவில்லை என குஜராத் அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குஜராத் இனப்படுகொலை: இரண்டு சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) அதிகாரிகளை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவு"
கருத்துரையிடுக