22 ஏப்., 2010

அதிகம் நீர் அருந்தினால் வலிப்பு நோயை தவிர்க்கலாம்

அதிக உஷ்ணமான தட்பவெட்ப நிலையின் காரணமாக வலிப்பு ஏற்படலாம் இதை ஆங்கிலத்தில் heat hyperpyreixia என்று அழைக்கப்படுகிறது. அதிக வெட்பத்தில் வேலை செய்யும் பழக்கம் இல்லாதவர்கள் இதற்கு இறையாகிரார்கள் என்று அலஹாபாத் மருத்துவர் முஸ்தாக் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமற்ற உடைகளும் குறைந்த காற்றோட்டமும் விளைவை அதிகபடுத்துகிறது. அதிக நேரம் வெயிலில் ஆட்கொள்பவர்கள் இதற்கு இலக்காகிறார்கள் மேலும் உடம்பின் உஷ்ணம் 105F ஆக உயரும்.

உடம்பின் உஷ்ணம் கடுமையாக உயரும்போது நரம்பு மண்டலமும் மூளையும் பாதிக்கபடுகிறது. மூளையில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உடம்பின் உஷ்ணம் அதிகமாக உயருதல், வியர்வையின்மை, சிவந்த காய்ந்த மேனி மற்றும் சுவாசிக்க சிரமப்படுதல் இவைகளே நோயின் அறிகுறிகளாகும்.

உடம்பின் உஷ்ண அளவு 105ஆக உயரும்போது மனிதன் மயக்கநிலைக்கு சென்றுவிடுவான், அதிக காச்சல் உண்டாகும் அது உடம்பின் நீர் அளவை குறைத்துவிடும் அதனால் கிட்னி செயலிழக்கலாம் அது மரணம் வரை செல்ல நேரிடும்.

வலிப்பு நோய் பெற்றவரின் உயிரை சில எளிதான வழிகளில் காப்பாற்றலாம்.முதலில் அவரின் உடம்பின் உஷ்ணத்தின் நிலையை மிக விரைவாக குறைக்க வேண்டும், பாதிக்கப்பட்டவரை நிழலான இடத்திற்கு மாற்றவேண்டும். மேலாடைகளை கழற்றி விட்டு உடம்பில் தண்ணீர் ஊற்ற வேண்டும், காற்று படும் அளவிற்கு வழிவகை செய்ய வேண்டும். உடம்பின் உஷ்ண அளவை கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். அதிகிரிக்கும்போது உஷ்ணத்தை 101 லிருந்து 102F வரை குறைக்கும் வழிகளை கையாள வேண்டும் என்று மருத்துவர் SK.ஷுக்லா அலோசனை வழங்கியுள்ளார்.

ஒரு நாளைக்கு குறைந்தது 15லிட் தண்ணீர் அருந்த வேண்டும் ORS மற்றும் மற்ற பானங்கள் அதிகம் அருந்த வேண்டும். உப்பு அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுக்கம் இல்லாத காட்டன் அடைகளை அணிய வேண்டும். உடலை வெயில் படாத வகையில் மறைத்துக்கொள்ள வேண்டும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அதிகம் நீர் அருந்தினால் வலிப்பு நோயை தவிர்க்கலாம்"

கருத்துரையிடுக