22 ஏப்., 2010

ஈரானிற்கெதிராக ஒபாமாவின் அனுஆயுத தாக்குதல் மிரட்டலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்- ஆயத்துல்லா

டெஹ்ரான்:ஈரான் மற்றும் கொரியா நாட்டிற்கெதிராக அமெரிக்காவின் அனுஆயுத தாக்குதலின் மிரட்டல்களை தொடர்ந்து, அமெரிக்காவின் போர்தொடுக்கும் எண்னத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ளவேண்டும். இதற்கு ஒபாமாவின் அமெரிக்க அரசுதான் முழுவதுமாக பொறுப்பேற்க்க வேண்டும் என்று உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என ஈரானின் மூத்த தலைவர் ஆயதுல்லா சையத் அலி கூறியுள்ளார்.

சர்வதேச நாடுகளுக்கும் இந்த மிரட்டல்களை தவிர்க்கும் உரிமை கிடையாது என்று டெஹ்ரானில் நடைபெற்ற செவிலிகள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒபாமாவின் இந்த மிரட்டல், அமெரிக்க வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்றும் மனிதகுலத்திற்கு எதிராக இப்படி ஒரு மிரட்டலை விடுவதற்கு உலகத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அலி சூசகமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் எக்காலமும் யு.எஸ்சின் நரக தலைமைத்துவத்திற்கு அடி பணிய மாட்டோம் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்கா அணுஆயுதத்தை கொண்டு ஈரான், கொரியா போன்ற நாடுகளை தாக்கலாம் என்பதுபோல சட்டத்தை மாற்றியமைத்தது நினைவிருக்கலாம். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
source:FARSNEWS

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈரானிற்கெதிராக ஒபாமாவின் அனுஆயுத தாக்குதல் மிரட்டலை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்- ஆயத்துல்லா"

கருத்துரையிடுக