22 ஏப்., 2010

குஜராத்:மதரஸாவின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

காந்திநகர்:குஜராத்தில் உள்ள ஒரு மதரஸா நிர்வாகம் ஆங்கில வழி 8ஆம் வகுப்பு ஆரம்பிப்பதற்கு மாநில கல்வித்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருந்தது. அந்த கோரிக்கை எவ்வித விசாரணையுமின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.

குஜராத் உயர்நீதிமன்றம் கல்வித்துறை அமைச்சகத்திடம் மதரஸாவின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு பணித்துள்ளது.மேலும் நீதீபதி புஜ் கூறுகையில் மதரஸாவின் கோரிக்கை மனுவை பெற்றது(heared) ஒரு அதிகாரியும் அதனை நிராகரித்து ஆணை பிறப்பித்தது இன்னொரு அதிகாரியுமாவார் இது சட்டத்திற்கு புறம்பானது,இச்செயலின் மூலம் அதிகாரிகள் சட்டத்தை மதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மதரஸா நிர்வாகம் செப்.12 2009 அன்று அமைச்சகத்தின் நிராகரிப்பை மேல்முறையீடு செய்தது அதுவும் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் மார்ச்.25-2010 அன்று முறையிட்டுள்ளது.
source:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத்:மதரஸாவின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு"

கருத்துரையிடுக