22 ஏப்., 2010

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் மோடி ரகசிய ஆலோசனை

நாக்பூர்:ஐ.பி.எல் விவகாரத்தில் மற்றொரு மோடி வாட்டி வதைக்கப்படும் இச்சூழலில், நரேந்திர மோடி (குஜராத் மதக்கலவரத்தின் புகழ்) தன் பாசிச ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை தனி விமானம் மூலம் நாக்பூர் சென்று சந்தித்தார்.

ஆர்.எஸ்.எஸ் தலைமை செயலகத்தில் நடந்த இந்த இரண்டு மணிநேர ஆலோசனையில் குஜராத் கலவரத்தை விசாரித்து வரும் எஸ்.ஐ.டி மற்றும் அதன் விசாரணைப் பற்றி பேச்சு நடந்ததாக தெரிகிறது.அதில் சுமார் ஆர்.எஸ்.எஸின் பத்து மூத்தத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தனி சிறப்பு விமானத்தில் வந்த மோடியை பத்திரிகையாளர்கள் சந்திக்க இயலாதவாறு பாதுகாப்பை மாற்றியமைத்திருந்தனர் அதிகாரிகள்.

மிகவும் ரகசியமாக இந்த சந்திப்பு நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஊன்றுகோல் பி.ஜே.பி பிரதிநிதி மதன் தாஸ் தேவி உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பை பற்றி உள்ளூர் தலைவர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.

அனைத்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி தொண்டர்கள் டில்லி மாநாட்டிற்காக பயணித்த சமயத்தில், இந்த சந்திப்பு நடந்திருப்பது மிகவும் மர்மமாக உள்ளது. டில்லி மாநாட்டில் நரேந்திர மோடி மற்றும் பி.எஸ்.எடியுரப்பா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாக்பூரில் கட்காரி இல்லாத சமயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சந்திப்பிற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் தொடர்பாளர் ராம் மாதேவ் கூறுகையில், இந்தக் கூட்டம் கோத்ராவிற்கு பிறகு நடந்த கலவரத்தையும், அதன் விசாரணையை பற்றியும் ஆலோசிக்க கூட்டப்பட்டது என்றார்.

கடந்த மாதம், மோடியை 2002யில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த கலவரத்தில், முன்னால் எம்.பியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில் மோடி உட்பட பல குற்றவாளிகளை எஸ்.ஐ.டி விசாரித்தது நினைவிருக்கலாம்.

ஐ.பி.எல் விவாகாரத்திலும் நரேந்திர மோடியின் பெயர் அடிப்படுவதை பற்றி விவாதித்தீர்களா என்ற கேள்விக்கு எதிர்மறையில் பதில்வந்தது. மாலை 6.50 மணிக்கு வந்த கொடூர மோடி இரவு 9.45 மணிக்கு குஜாரத் திரும்பினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் மோடி ரகசிய ஆலோசனை"

கருத்துரையிடுக