22 ஏப்., 2010

சர்ச்சைகளுக்கு மத்தியில் புர்காவை தடைசெய்ய தயாராகும் ஃபிரான்ஸ்

பாரிஸ்:பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், முஸ்லீம்கள் பொது இடங்களில் புர்கா அணியக்கூடாது என்ற சட்ட மசோதா அடுத்த மாதம் ஃபிரான்ஸ் பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்படவுள்ளது.

கடந்த, புதன்கிழமை, இது குறித்து ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி வலியுறுத்தியதையடுத்து, வரும் மே மாதம் இந்தச் சட்டம் அமைச்சரவையில் இயற்றப்படவுள்ளது என்று அரசு செய்தி தொடர்பாளர் லூக் சாடல் தெரிவித்துள்ளார்.

புர்கா அணிவது பெண்களை காயப்படுத்துவதாகவும், இது ஃபிரான்ஸ் சமூகத்தில் ஒத்துக் கொல்லப்படமாட்டா! என்று சர்கோஸி கூறியதாக லூக் மேலும் தெரிவித்தார். மதத்தினால் யாரும் அடிமைபடுத்த முடியாதவாறு அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்க வேண்டும் என்று சர்கோஸி உத்தரவு பிறபித்துள்ளதாக லூக் மேலும் கூறினார்.

ஐரோப்பிய கண்டத்திலயே ஃபிரான்சில் தான் அதிக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். 62 மில்லின் மக்கள்தொகைக் கொண்ட ஃபிரான்சில், முஸ்லிம்கள் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர்.

தன் அக்கம் பக்கத்தினர் புர்கா அணிவதை கண்டு கொதிப்படைந்த ஃபிரான்ஸ் மேயர்கள், புர்கா தடை செய்வதை முதன் முதலில் கையிலெடுத்தனர். ஃபிரான்ஸ் பார்லிமென்ட்டில் இது குறித்து விவாதங்களும், வாக்குப்பதிவும் நடந்தது. வாக்குப்பதிவில் அதிக மக்கள் புர்கா தடை செய்வதை ஆதரித்திருந்தாலும், சட்ட வல்லுனர்கள் இது குறித்து அரசுக்கு எச்சரித்திருந்த செய்தியை சில நாட்களுக்கு முன் நமது பாலைவனத்தூதில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

சமுதாயத்தில் கட்டாயப்படுத்தப்பட்டு சில பெண்கள் புர்கா அணிவதாகவும், இச்சட்டத்தினால் அப்பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று காரணம் காட்டி ஃபிரான்ஸ் அரசு தன் காரியத்தை கட்சிதமாக சாதித்துள்ளது.
source:Times of india

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சர்ச்சைகளுக்கு மத்தியில் புர்காவை தடைசெய்ய தயாராகும் ஃபிரான்ஸ்"

கருத்துரையிடுக