31 மார்., 2010

புர்காவை தடை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும் -ஃபிரான்ஸ் அரசுக்கு ஸ்டேட் கவுன்சில் அறிவுரை

பாரிஸ்:பொது இடங்களில் முஸ்லீம்கள் புர்கா அணிவதை முழுவதுமாக தடைசெய்வது சட்ட விரோதம் என்றும், அப்படி செய்தால் அது ஒரு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் என்றும், ஆதலால் இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் புர்கா தடையை விசாரித்து வரும் ஃப்ரன்ஸ் ஸ்டேட் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிரான்சின் உச்ச நீதிமன்றம் போல் கருதப்படும் இந்த தீற்பாயம், மேலும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, புர்கா முறையை பாதியளவு தடைச் செய்தாலும் அது பெறும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் புர்கா தடையை அமல்படுத்துவது ஃபிரெஞ்ச் மற்றும் ஐரோப்பிய வரைமுறைகளின் மனித உரிமை மீறலாகும் என்றும் விமர்சித்துள்ளது. முன்னதாக,பிரான்ஸ் பிரதமர் புர்கா முறையை தடைசெய்வது குறித்து ஸ்டேட் கவுன்சிலிடம் ஆலோசனை கேட்டிருந்ததை தொடர்ந்து இந்த அறிக்கை வெளிவந்தது.

பிரான்சின் பார்லிமென்ட் கமிட்டி புர்கா முறையை பாதியளவாவது தடை செய்ய வேண்டும் என்று முன்னதாக அரசை கேட்டு கொண்டது.

ஒரு பக்கம்,பிரான்சின் ஜனாதிபதி சர்கோஸி முழு தடையை வலியுறுத்தியும், புர்கா முறையை தடைசெய்வதின் மூலம் பிரான்ஸ் அரசு பெண்களின் எதை வேண்டுமானாலும் அணியலாம் என்ற ஜனநாயக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் மற்றொரு பக்கம் மக்கள் குரல் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், ஸ்டேட் கவுன்சிலின் இந்த அறிவுரை வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருப்தப்படுகிறது.

இவ்விவகாரத்தில், பிரான்ஸ் அரசு தன் நிலைபாட்டை மாற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
source:Gulf news

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புர்காவை தடை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும் -ஃபிரான்ஸ் அரசுக்கு ஸ்டேட் கவுன்சில் அறிவுரை"

கருத்துரையிடுக