ப்ரஸ்ஸல்ஸ்:மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனலின் ஆண்டறிக்கையில் சீனாவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
சீனாவில் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தும் மரண தண்டனையின் எண்ணிக்கையை வெளியிடாமல் உண்மையான எண்ணிக்கையைவிட குறைவாக காண்பிப்பதாக ஆம்னஸ்டி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் எத்தனை பேர் மரண தண்டனைக்கு ஆளாகிறார்கள் என்பதை சீனா வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று ஆம்னஸ்டி சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது.
மரண தண்டனை நடைமுறைப்படுத்தும் நாடுகளைக் குறித்த அறிக்கையில் உலக நாடுகள் மொத்தமாக மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதைவிட சீனாவில் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தும் மரண தண்டனையின் எண்ணிக்கை அதிகம் என கூறப்பட்டுள்ளது.
மரணதண்டனைக்கு ஆளாகும் நபர்களுக்கு அதற்கு முன்பு சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் படியான விசாரணைக்கூட நடப்பதில்லை எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
2008 ஆம் ஆண்டு ஆம்னஸ்டியின் புள்ளிவிபரப்படி சீனாவில் மரணதண்டனைக்கு ஆளானவர்கள் 1718 பேர். சீனா மட்டுமின்றி ஈரான், அமெரிக்கா, ஈராக், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் மரண தண்டனையை நிறைவேற்றிவருகின்றனர்.
அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டு 56 நாடுகளில் 2001 பேர் மரணதண்டனைக்கு ஆளாகினர். 95 நாடுகள் இதுவரை மரணதண்டனையை தடைச் செய்துள்ளன. கடந்த ஆண்டு இந்தோனேஷியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளில் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.மேலும் பல நாடுகளும் மரணதண்டனையை கைவிடுவதாகவும் ஆம்னஸ்டி கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மரணத்தண்டனை:சீனாவிற்கெதிராக ஆம்னஸ்டி கடும் குற்றச்சாட்டு"
கருத்துரையிடுக