22 ஏப்., 2010

குவைத்தில் 1.4 கோடி டாலர் ஒப்பந்தக்காரர்களிடம் இலஞ்சமாக பெற்ற அமெரிக்க ராணுவ வீரர்

குவைத்:குவைத்தில் உள்ள 2 அமெரிக்க தளங்களில் உணவு விநியோகத்தை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்த 42 வயதுடைய அமெரிக்க ராணுவ சார்ஜண்ட் ராய் ஸ்காட் சேஸ் அப்பணியை மேற்கொண்ட ஓப்பந்தக்காரர்களிடமிருந்து 1.4 மில்லியன் டாலர்கள் லஞ்சமாக பெற்றதாக அமெரிக்காவில் உள்ள இல்லியானாஸ் மாகாண நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

குவைத்தில் 2002 - 2003 ஆண்டுகளில் தான் கேம்ப் தோஹா மற்றும் ஆரிப்ஜான் கேம்பில் பணியாற்றி கொண்டிருந்த போது இத்தொகையினை இலஞ்சமாக பெற்று கொண்டதை ஒத்து கொண்டார்.

ராய் உணவு விநியோக நிறுவனங்களுக்கு பொறுப்பாளராகவும் அமெரிக்க படைகளுக்கு கம்பளி வாங்கும் நிறுவனங்களுக்கும் பொறுப்பாளராக இருந்ததால் அதிலும் இலஞ்சம் வாங்கியிருக்கின்றாரா என்றும் விசாரணை நடத்துகின்றனர்.

தமீம் குளோபல் கம்பெனி லிமிடெட், லா நுவாலா ஜெனரல் டிரேடிங் காண்டிராடிங்க் கார்பரேஷன் ஆகிய நிறுவனங்களிடமிருந்து ராய் இப்பணத்தை இலஞ்சமாக பெற்றுள்ளார் என்று தெரிகிறது.

தாம் பெற்ற பணத்தை திரும்ப ஒப்படைக்க சம்மதித்துள்ள ராய்க்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
source:inneram

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குவைத்தில் 1.4 கோடி டாலர் ஒப்பந்தக்காரர்களிடம் இலஞ்சமாக பெற்ற அமெரிக்க ராணுவ வீரர்"

கருத்துரையிடுக