22 ஏப்., 2010

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு: 3 பேருக்கு தூக்குத் தண்டனை

புதுடெல்லி:டெல்லி லஜ்பத் நகரில் 1996 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றம்சாட்ட 10 பேரில் 6 பேர் குற்றவாளிகள் என ஏப்ரல் 8-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அவர்களுக்கான தண்டனை விவரத்தை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி கார்க் இன்று அறிவித்தார்.

முகமது நெளஷத், முகமது அலி பட் மற்றும் மிர்ஸா நிசார் ஹூசைன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கார்க் தெரிவித்தார்.

ஜாவீத் அகமது கான் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபரூக் அகமது கான் மற்றும் ஃபரிதா தார் ஆகியோருக்கு வழக்கு விசாரணை முடியும் வரையிலான சிறைத்தண்டனை என நீதிபதி அறிவித்ததால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்படுவர் எனத் தெரிகிறது.

தண்டனை வழங்கப்பட்டுள்ள அனைவரும் ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிக் முன்னணியைச் சேர்ந்தவர்களாவர். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் வழக்காகும்.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு: 3 பேருக்கு தூக்குத் தண்டனை"

கருத்துரையிடுக