22 ஏப்., 2010

மின்னணு நிர்வாக நடைமுறையில் இந்தியாவுக்கு 58வது இடம்

மின்னணு நிர்வாக நடைமுறையை அமல்படுத்தும் நாடுகள் பட்டியலில் இந்தியா 58-வது இடத்தில் உள்ளது. இத்தகவலை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின் போது அவர் அளித்த பதில்: அரசு நிர்வாகத்தில் மின்னணு முறை பயன்படுத்துவதில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. அத்துடன் இத்துறையில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நாடுகளின் தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 58-வது இடத்தில் உள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அத்துடன் 80 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தேசிய அறிவுசார் ஒருங்கிணைப்பை மத்திய அரசு உருவாக்கி அதைச் செயல்படுத்த ரூ. 5,990 கோடி ஒதுக்கியுள்ளது.

அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் இணையதளம் மூலம் மூன்று ஆண்டுகளுக்குள் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் பல்கலைக் கழகங்களின் நூலகங்களும், மருத்துவமனைகளும்,வேளாண் பல்கலைக் கழகங்களும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

தேசிய மின் ஆளுகை திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பத்துறை தற்போது பொதுவான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இதற்கு ரூ. 1,623.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மொபைல்போன் மற்றும் இணையதளம் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார் சச்சின் பைலட்.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மின்னணு நிர்வாக நடைமுறையில் இந்தியாவுக்கு 58வது இடம்"

கருத்துரையிடுக