3 ஏப்., 2010

சிறுபான்மை நலனுக்கெதிராக ஒன்றிணைந்த பரமவைரிகள்: கமால் அக்தர் எம்.பி பேச்சு

மஞ்சேஷ்வரம்(கேரளா):பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவில் முஸ்லிம்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டினை முறியடிக்க அரசியலில் பரம வைரிகளான கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டதை சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் பிரிவு தேசியத்தலைவர் கமால் அக்தர் எம்.பி கடும் கண்டனம் தெரிவித்தார்.

மகளிர் மசோதா ராஜ்யசபையில் தாக்கல் செய்யப்பட்ட பொழுது பா.ஜ.க தலைவர் சுஷ்மா சுவராஜும், சி.பி.எம்மின் பிருந்தாகாரத்தும் காங்கிரஸும் சி.பி.ஐ கட்சியும் ஒன்றிணைந்ததின் பின்னணியை கமால் அக்தர் விவரித்தார்.

கேரளாவில் மஞ்சேஷ்வரத்தில் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆப் இந்தியா நடத்தும் ஜன கேரளா(மக்கள் கேரளா) யாத்திரையை துவக்கிவைத்து உரையாற்றினார் கமால் அக்தர். சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகள் முடிவடையும் பொழுது இந்நாட்டை அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வேண்டி இக்காலக்கட்டத்தில் காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை அவர்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே கணித்தது.

இந்நாட்டில் நடைபெற்ற கலவரங்களில் ஆயிரக்கணக்கான நிரபராதிகள் கொன்றழிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தோன்றிய முஸ்லிம் லீக் கட்சி சோனியா லீக் கட்சியாக மாறிவிட்டது. கேரளாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரிகளும் ஆட்சிச் செய்தபிறகும் முஸ்லிம்கள்-தலித்துக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து வீட்டில் இருக்கவேண்டும் என நாட்டை ஆளும் கட்சிகள் விரும்புகின்றன. அதனால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள்ஒதுக்கீடுச் செய்யாதது என்று கமால் அக்தர் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு எஸ்.டி.பி.கேரள மாநிலத் தலைவர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் தலைமை வகித்தார். ஜன கேரளா யாத்திரையை கொடியை அசைத்துத் துவக்கி வைத்தார் எஸ்.டி.பி.ஐயின் தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் ஸாஜித் ஹுசைன் சித்தீகி.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சிறுபான்மை நலனுக்கெதிராக ஒன்றிணைந்த பரமவைரிகள்: கமால் அக்தர் எம்.பி பேச்சு"

கருத்துரையிடுக