3 ஏப்., 2010

மோதுவது பெரும் புள்ளிகள் என்றாலும் தடுமாறாத அஞ்சுகுப்தா

புதுடெல்லி:தான் மோதுவது பெரும்புள்ளி என்பதை புரிந்துக் கொண்டுதான் அஞ்சுகுப்தா அத்வானிக்கு எதிராக சாட்சி அளிப்பதற்கு ராய்பரேலி நீதிமன்றத்திற்கு வருகைப் புரிந்தார்.

ராமனின் பெயரால் சத்தியப் பிரமாணம் செய்து 1990 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பட்டத்தைப் பெற்ற குப்தாவிற்கு ராமனின் பெயரால் சிலர் ஆடும் நாடகத்தைக் கண்டு பொறுக்க இயலவில்லை. பாப்ரி மஸ்ஜித் வீழ்த்தப்பட்டபொழுது அத்வானி மகிழ்ச்சியில் திளைத்ததாகவும், அத்வானியின் உணர்ச்சியைத் தூண்டும் உரை பாப்ரி மஸ்ஜிதை தகர்க்க வந்த கரசேவகர்களை உற்சாகமூட்டியதாகவும் அஞ்சு குப்தா அளித்த சாட்சி அத்வானி மற்றும் பா.ஜ.க வின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு பிறகு குறுக்கு விசாரணைக்காக 45 வயதான அஞ்சுகுப்தா இதே நீதிமன்றத்திற்கு வருகைத் தருவார். அன்றும் அவருடைய வாக்குமூலம் முக்கியத்துவம் பெறும். பாப்ரி மஸ்ஜித் தகர்த்ததைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷனின் முன்னால் என்ன சாட்சியம் அளித்தாரோ அதனையே ராய்பரேலி நீதிமன்றத்திலும் தெரிவித்தார் அஞ்சுகுப்தா.

ஆனால் முஸ்லிம் ஒருவரை திருமணம் முடித்தக் காரணத்தினால்தான் அஞ்சுகுப்தா அத்வானிக்கு எதிராக பொய்சாட்சியம் கூறுகிறார் என பா.ஜ.க அங்கலாய்க்கிறது.

1989 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிறப்பு பணி அதிகாரியாகவும் பணியாற்றிய ஷாஃபி அஹ்ஸான் ரிஸ்வியை திருமணம் முடித்தாலும் அஞ்சு குப்தா ஹிந்துவாகவே வாழ்ந்து வருகிறார்.

தற்ப்பொழுது கேபினட் செயலக இயக்குநரான அஞ்சுகுப்தாவின் வாழ்க்கைமுறை அவருக்கெதிரான குற்றச்சாட்டை மறுப்பதாகவே உள்ளது. ரிஷிகேஷில் பெரும் வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர் அஞ்சுகுப்தா. இயற்பியலில் எம்.பில் பட்டம்பெற்ற பின் 1990 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் முடித்தவர். 1992 ஆம் ஆண்டு பைஸாபாத்தில் ஏ.எஸ்.பியாக பணியாற்றிய பொழுதுதான் அத்வானி என்ற வி.வி.ஐ.பிக்கு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட அஞ்சுகுப்தா பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு சாட்சியாகவும் மாறினார்.

லக்னோ, லளித்பூர், உத்தம்சிங் நகர், பிரதாப்கர் ஆகிய இடங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்துள்ளார். பிரதாப்கரில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பொழுதுதான் அங்கு எம்.எல்.ஏவாகவும் கிரிமினலாகவும் செயல்பட்ட ராஜுபய்யாவுடன் அஞ்சுவுக்கு மோதல் ஏற்பட்டது. பய்யாவின் கிரிமினல் வாழ்க்கைப்பற்றிய தெளிவான ஆதாரங்களை சேகரித்த அஞ்சுகுப்தா ராஜு பய்யாவை ஒடுக்கிவிட்டுத்தான் அடங்கினார்.

உத்தர்பிரதேஷ் விஜிலன்ஸ் டிபார்ட்மெண்ட், க்ரைம் ரிக்காட் பீரோ ஆகியத் துறைகளிலும் பணிபுரிந்தார் அஞ்சு. 2000 ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கமிஷனின் ஆலோசகராக பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டில் மீரட் எஸ்.எஸ்.பியாக பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு காவல்துறையில் சிறப்பான சேவைக்காக போலீஸ் பதக்கத்தைப் பெற்றார். 2009 ஆம் ஆண்டு கேபினட் செயலகத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மோதுவது பெரும் புள்ளிகள் என்றாலும் தடுமாறாத அஞ்சுகுப்தா"

கருத்துரையிடுக