6 ஏப்., 2010

நெல்லை அருகே விபத்து: தமுமுக நிர்வாகிகள் காயம்

திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை கார் விபத்துக்குள்ளானதில், தமுமுக நிர்வாகிகள் 7 பேர் காயமடைந்தனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள், அதன் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாவை மதுரைக்கு வழியனுப்ப திங்கள்கிழமை காலை காரில் புறப்பட்டுச் சென்றனர். அவரை அங்கு வழியனுப்பிவிட்டு, ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

தாழையூத்து அருகே பண்டாரகுளம் பக்கம் வரும்போது சாலையின் குறுக்கே ஆடு சென்றதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கிருந்த பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் திருநெல்வேலி மாவட்ட தமுமுக தலைவர் மைதீன்பாரூக்(34), மாவட்டச் செயலர் இ. உஸ்மான்கான் 37), மனிதநேய மக்கள் கட்சி மாவட்டப் பொருளாளர் ரசூல்மைதீன்(32), பாளையங்கோட்டை பகுதி செயலர் யாசர், நிர்வாகிகள் பழையபேட்டையை சேர்ந்த ஜமால் முகம்மது மகன் செய்யது சிராஜிதீன் (33), நியாஸ் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நெல்லை அருகே விபத்து: தமுமுக நிர்வாகிகள் காயம்"

கருத்துரையிடுக