6 ஏப்., 2010

மகளிர் மசோதா: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு ஏற்படவில்லை

புதுதில்லி:மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

நாடாளுமன்ற வளாகத்தில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். மசோதாவை எதிர்க்கும் தலைவர்களில் பெரும்பாலானோர் தங்களி்ன் முடிவில் உறுதியாக இருந்ததால் கூட்டத்தில் முடிவு எதுவும் ஏற்படவில்லை.

மசோதாவில் தற்போதைய வடிவிலேயே தலித்துகள். சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், உள்துறை அமைச்சர் சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கும் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் மகளிர் மசோதாவை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்குள் மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் கருத்தொற்றுமை ஏற்படச் செய்ய கடுமையாக முயற்சி செய்வோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மகளிர் மசோதா: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு ஏற்படவில்லை"

கருத்துரையிடுக