6 ஏப்., 2010

குற்றச்சாட்டிலிருந்து விடுபடாமல் இந்தியாவை விட்டுச செல்லமாட்டேன்- சோயப் மாலிக்

ஹைதராபாத்:தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்காமல் இந்தியாவை விட்டுச் செல்லமாட்டேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் தெரிவித்தார்.

சோயப் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றக்குற்றச்சாட்டுடன் களமிறங்கியுள்ள ஆயிஷா தன்னை மனரீதியாக பிளாக்மெயில் செய்வதாக சோயப் தெரிவித்தார்.

ஏப்ரல் 15 ஆம் தேதி தான் திருமணம் செய்யவிருக்கும் சானியா மிர்ஷாவுடன் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார் அவர். ஆயிஷா ஏன் பொது இடத்தில் வந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை? என சோயப் வினவினார்.

சோயப் காரணமாக தான் கர்ப்பமடைந்ததாக ஆயிஷாவின் குற்றச்சாட்டைக் குறித்து வினவியபொழுது 'ஆயிஷா ஏன் இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்?' என தெரியவில்லை என சோயப் தெரிவித்தார்.

தனது எதிர்கால மனைவி இத்தகைய கேள்விக் கணைகளை சந்திக்கவேண்டிய சூழல் குறித்து இருவீட்டாருக்கும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் சோயப் தெரிவித்தார். பிரச்சனையை நீதிமன்றத்தின் முடிவுக்கு விடவேண்டுமென்றும், பொது இடத்தில் இதனை சர்ச்சைச் செய்யக்கூடாது எனவும் சானியா மிர்ஷா பத்திரிகையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே ஆயிஷாவுக்கு சோயபுடன் உடல்ரீதியாகவும் உறவு இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். ஆயிஷா கர்ப்பிணியான பின்னர் அதனை கலைத்ததாகவும், இதுத்தொடர்பான ஆதாரங்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஆயிஷாவின் உறவினர் டாக்டர் ஷாம்ஸ் பாபர் கூறுகிறார்.

ஆயிஷாவை ஏமாற்றியதற்காக சோயப் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் எனவும், நிக்காஹ் நடந்த விபரத்தை சம்மதித்த பிறகு அதிகாரப்பூர்வமாக விவாகரத்துச் செய்யவேண்டும் எனவும் கூறிய ஷாம்ஸ் பாபர் ’எங்களுக்கு சோயபிடமிருந்து பணம் ஒன்றும் தேவையில்லை.பிரச்சனைகள் முடிவுற்றால் சோயபும் சானியாவிற்குமிடையேயான திருமணத்திற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குற்றச்சாட்டிலிருந்து விடுபடாமல் இந்தியாவை விட்டுச செல்லமாட்டேன்- சோயப் மாலிக்"

கருத்துரையிடுக