12 ஏப்., 2010

நடுவானில் மோதவிருந்த இரு விமானங்கள் – பெரும் விபரீதம் தவிர்ப்பு

மும்பை:நடுவானில் இரு விமானங்கள் மோதிக் கொள்வது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மும்பைக்கு அருகே அரபிக் கடலுக்கு மேலே இந்த விபரீதம் நடக்கவிருந்த்து.

மாலே செல்லும் கான்டர் ஏர்லைன்ஸ் விமானமும், மெல்போன் செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானம் மும்பைக்கு அருகே அரபிக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது நேருக்கு நேர் சந்திக்கும் வகையில் எதிரெதிர் வந்தன. இதையடுத்து மும்பை விமானக் கட்டுப்பாட்டு மையம் இரு விமானங்களையும் உஷார்படுத்தியது.

ஒரு விமானத்தை 3000 அடி கீழே பறக்குமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து அந்த விமானம் தாழப் பறந்தது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநர் ஜெய்தி கூறியுள்ளார்.

கான்டர் ஏர்லைன்ஸ் விமானம், லுப்தன்சா நிறுவனத்தின் பிரிவு விமானமாகும். இந்த விமானம் பிராங்பர்ட்டிலிருந்து மாலே நோக்கிச் சென்று கொண்டிருந்த்து. இன்னொரு விமானம் தோஹாவிலிருந்து மெல்போர்ன் நோக்கி பறந்து கொண்டிருந்த்து.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நடுவானில் மோதவிருந்த இரு விமானங்கள் – பெரும் விபரீதம் தவிர்ப்பு"

கருத்துரையிடுக