அடிலெய்ட்:சாலமன் தீவுகளில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பூகம்பம், ரிக்டர் அளவில் 7.1 என பதிவாகி உள்ளது.
தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள கிரா கிரா தீவுப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகம்பவியல் ஆய்வு மையத் தகவல் தெரிவிக்கிறது.
சாலமன் தீவுகளின் தலைநகர் ஹொனாய்ராவில் இருந்து தென்கிழக்கே 210 கிமீ தொலைவுக்கு அப்பால் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த பூகம்பத்தால் சுனாமி பேரலைகள் எழக்கூடிய வாய்ப்புகள் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. இன்றைய பூகம்பத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
source:thatstamil

0 கருத்துகள்: on "சாலமன் தீவில் கடும் நிலநடுக்கம்"
கருத்துரையிடுக