21 ஏப்., 2010

பணிநீட்டிப்பைக் கண்டித்து பாட்டெழுதிய அமெரிக்க ராணுவவீரன் பணிநீக்கம்

அமெரிக்க ராணுவவீரர் ஒருவர் தனது பணி நீட்டிப்பைக் கண்டித்து பாட்டின் மூலம் தனது எதிர்ப்பை தெரிவித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ராணுவவீரரான மார்க் ஹால் தனது பணி நீட்டிப்பைக் கண்டித்து பாட்டின் மூலம் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இச்செயலை தவறான நடத்தை என்று காரணம் காட்டி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் மார்க் ஹால். அச்சுறுத்தும் வண்ணமுள்ள அந்தப் பாடலை ராணுவ அலுவலக்த்திற்கு ஜுலை 2009 அன்று அனுப்பி உள்ளார்.
"I got a (expletive) magazine with 30 rounds
on a three-round burst, ready to fire down.
…Still against the wall,
I grab my M-4,
spray and watch all the bodies hit the floor," என்று அந்த பாடல் வரிகள் உள்ளன.
எதிர்ப்பு தெரிவிக்கும் ராணுவ வீரர்களை ஆதரிக்கும் Couragetoresist.org என்ற அமைப்பு இந்த பணி நீக்கத்தை மகிழ்ச்சியான வெற்றி 'Joyous Victory' என்று வர்ணித்துள்ளது. மேலும் அந்த மார்க் ஹால் மனோரீதியாக போர் செய்யத்தயார் இல்லை என அந்த பாடலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
source:presstv

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பணிநீட்டிப்பைக் கண்டித்து பாட்டெழுதிய அமெரிக்க ராணுவவீரன் பணிநீக்கம்"

கருத்துரையிடுக