சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி எம்.ஒய்.இக்பாலை நியமிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்துவரும் நீதிபதி கோகலேவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க இக்குழு பரிந்துரை செய்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி இக்பாலின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டு பிறந்த நீதிபதி இக்பால் தன்னுடைய கல்லூரி கல்வியையும் சட்டக் கல்வியையும் ராஞ்சி பல்கலைக் கழத்தில் முடித்தார். 1975ஆம் ஆண்டு முதல் ராஞ்சி நகர நீதிமன்றங்களில் வாதாடிய இவர், பின்னர் பாட்னா உயர் நீதிமன்றத்தின் ராஞ்சி கிளையில் வாதாடினார்.
1990ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு முதல் ஜார்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
source:inneram
0 கருத்துகள்: on "சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி இக்பால் பரிந்துரை!"
கருத்துரையிடுக