ஆஸ்மி கொலை வழக்கில், இதுவரை பிடிபட்ட குற்றவாளிகளை 2 முறை போலீஸ் காவலில் எடுத்தும், சரியான ஆதாரங்கள் சிக்காமல், இவ்வழக்கை விசாரித்து வரும் மும்பை கரைம் ப்ரான்ச் தவித்து வருகிறது.
கடந்த புதன் கிழமையன்று மீண்டும் 10 நாள் போலீஸ் காவலை கேட்டு, கரைம் ப்ரான்ச் எம்.சி.ஒ.சி.ஏ நீதிமன்றத்தை அணுகியதையடுத்து இது ஊர்ஜிதப் படுத்தப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி, வினோத் விசாரேவின் தலைமையில் தேவேந்த்ர ஜக்தாப்(எ)ஜெ.டி, பின்டு தாக்லே மற்றும் சோலான்கி ஆகியோர் ஆஸ்மியை அவரின் அலுவலகத்தில் சுட்டுக் கொன்றது அனைவரின் நினைவில் இருக்கும்.
இதைத் தொடர்ந்து கரைம் ப்ரான்ச் இந்நான்கு குற்றவாளிகளையும் கைது செய்து விசாரித்ததில், இவர்கள் நிழலுலக தாதா மற்றும் அவனின் கூட்டாளி பாரத் நேபாளியின் திட்டத்தின் கீழ், ஆஸ்மியை கொலை செய்தது தெரியவந்தது.
ஆக, கடந்த இருமுறை இந்நான்கு குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தும், கரைம் ப்ரான்ச் மீண்டும் ஒருமுறை போலீஸ் காவலுக்காக நீதிமன்றத்தை அனுகியுள்ளது. இதை துணை கமிஷ்னர் அஷோக் டுபார்ஹே உறுதி செய்தார்.
க்ரைம் ப்ரான்ச் வட்டாரங்கள் தெரிவிக்கையில், இக்கொலை ஏன் மற்றும் எதற்க்காக செய்யப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கிறது.
source:mumbai mirror
0 கருத்துகள்: on "ஷாஹித் ஆஸ்மி கொலை வழக்கு:துப்புத் துலங்க முடியாமல் கரைம் பரான்ச் தவிப்பு"
கருத்துரையிடுக