திருவனந்தபுரம்:கிங்ஃபிஷர் விமானத்தில் வெடிக்குண்டு வைத்த வழக்கில் கைதுச் செய்யப்பட்ட ராஜசேகரன் நாயருக்கு ஹிந்துத்துவா அமைப்பான ஹரித்துவார் மித்ரா மண்டலத்துடனான தொடர்பு வெளியானத்தைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் தீவிரவாதத் தொடர்பு இல்லை எனக்கூறிய கேரள காவல்துறையினரின் வாதம் பொய்யென தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்திலிலுள்ள ஏராளமான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க தொண்டர்களுக்கு ஹரித்துவார் மித்ரா மண்டலத்துடன் தொடர்பு உள்ளதை போலீஸ் கண்டறிந்துள்ளது.
அமைப்புகளின் பெயர் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையின் உள்ளூர் நிருபரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்தது. வலியரத்தல என்ற இடத்திலிலுள்ள கோயில் நிர்வாகிகளிடமிருந்து இதுத்தொடர்பான விபரங்களை சேகரித்திருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக குஜராத்தை மையமாக வைத்து செயல்படும் ஹரித்துவார் மித்ரா மண்டலம் என்ற ஹிந்துத்துவா அமைப்பிற்கு கேரளாவில் மட்டும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. குஜராத்தில் வசிக்கும் ஒரு மலையாளி தொழில் அதிபர்தான் இவ்வமைப்பின் முக்கியத் தலைவர்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் வலியரத்தலா, கிருஷ்ணபுரம், மாடன்பார, மலையின்கீழ் ஆகிய இடங்கள் ஹரித்துவார் மித்ரா மண்டல அமைப்பிற்கு முக்கிய மையங்களாக உள்ளன. இவ்விடங்களிலிலுள்ள ஏராளமான இளைஞர்கள் இவ்வமைப்புத் தொடர்பான பணிக்காக குஜராத்திற்கு சென்றுள்ளனர். குஜராத்திலிருந்து பெரிய அளவில் பொருளாதார உதவியும் கிடைக்கிறது.
ராஜசேகரன் நாயரின் கைதைத் தொடர்ந்து இப்பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளது. ராஜசேகரன் நாயர் கைதுச் செய்யப்பட்ட பொழுது தனிநபர் விரோதம்தான் காரணம் என போலீஸ் கூறியது. ஆனால் தனிப்பட்ட விரோதம் யார் மீது என போலீஸாரால் விளக்கமளிக்க இயலவில்லை.வெடிக்குண்டு வழக்கில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை போலீஸ் விசாரணைச் செய்தபொழுதும் இதனை போலீஸும், பத்திரிகைகளும் மூடிமறைத்தன.
வெடிக்குண்டில் சுற்றப்பட்டிருந்த கேள்வித்தாள்தான் ராஜசேகரன் நாயரை அடையாளம் காட்டியது.இந்த வினாத்தாளை வைத்து நடத்திய விசாரணையில்தான் ராஜசேகரன் நாயர் உறுப்பினராக உள்ள கோயில் நிர்வாக கமிட்டியைப் பற்றிய விபரம் கிடைத்தது. இந்தக் கோயில் நிர்வாகிகளிடமிருந்துதான் ஹரித்துவார் மித்ரா மண்டலம் என்ற ஹிந்துத்துவா அமைப்பைக் குறித்த விபரங்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கிங்ஃபிஷர் விமானத்தில் வெடிக்குண்டு: கண்காணிப்பில் ஹிந்துத்துவா அமைப்பு"
கருத்துரையிடுக