
இந்த கேபிள் சேவையை பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேசன் உள்பட 16 சர்வதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்த அமைப்பு நடத்தி வருகிறது.
இத்தாலி அருகே கடலுக்கடியில் இந்த கேபிளில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணிகள் நடக்கவுள்ளதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளி்ல் இண்டர்நெட் சேவைகள் மேலும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த கடலடி இண்டர்நெட் கேபிளுக்கு சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், செளதி அரேபியா, இத்தாலி, துனீசியா, அல்ஜீரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் டெர்மினல் ஸ்டேசன்கள் எனப்படும் மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
source:thatstamil
0 கருத்துகள்: on "கடலுக்கடியில் கேபிளில் பழுது- இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு"
கருத்துரையிடுக