29 ஏப்., 2010

உளவு:இரண்டு அதிகாரிகள் கண்காணிப்பில்

புதுடெல்லி:இந்திய தூதரக பிரதிநிதியான மாதுரி குப்தா உள்ளிட்ட உளவுவேலைப் பார்த்த குற்றத்துடன் தொடர்புடைய உயர் பதவியிலிருக்கும் ராணுவ அதிகாரி ஒருவரும், இன்னொரு ’ரா’(ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்) அதிகாரியும் பாதுகாப்பு ஏஜன்சிகளின் கண்காணிப்பில் உள்ளனர்.

ஜம்மு-கஷ்மீரில் ரஜவ்ரியில் வசிக்கும் தம்பதியினரை மாதுரி குப்தா இ-மெயில் மற்றும் தொலைபேசி வழியாக அடிக்கடி தொடர்புக் கொண்டதாக குப்தாவை விசாரணைச் செய்ததிலிருந்து தெரியவந்தது.

ரஜவ்ரியில் வசித்த தம்பதியினரை மூத்த ராணுவ அதிகாரியொருவர் சந்தித்தது தெளிவானதாக முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜவ்ரியில் வசித்து வந்த பெண்மணி பலமுறை பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அப்பெண்மணியும், மாதுரி குப்தாவும் பரிமாறிக் கொண்ட சில இ-மெயில் செய்திகளை போலீஸ் ஆதாரமாக எடுத்துள்ளது.

உளவு வேலையில் முக்கிய ’ரா’ அதிகாரியின் பங்கைக் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. மாதுரி குப்தாவுக்கு இவர்தான் தகவல்களை அளித்துள்ளார் எனக் கருதப்படுகிறது.

இஸ்லாமாபாத்தில் இந்தியத் தூதரகத்தில் இரண்டாம் நிலை செயலாளரான மாதுரி குப்தா சில தினங்களுக்கு முன்பு கைதுச் செய்யப்பட்டார். இந்தியாவின் ரகசியங்களை இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு அளித்ததாக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உளவு:இரண்டு அதிகாரிகள் கண்காணிப்பில்"

கருத்துரையிடுக