29 ஏப்., 2010

ஷொஹ்ரபுத்தீன் போலி என்கவுண்டர்:குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரி கைது

அஹ்மதாபாத்:போலி என்கவுண்டரில் ஷொஹ்ரபுத்தீன் ஷேக்கை கொலை செய்த வழக்கில் துணை போலீஸ் கமிஷனர்(டி.சி.பி) அபய் சுதாஸமாவை சி.பி.ஐ கைதுச் செய்தது.

இவ்வழக்கில் கைதாகும் நான்காவது ஐ.பி.எஸ் அதிகாரி சுதாஸமா என்பது குறிப்பிடத்தக்கது. ஷொஹ்ரபுத்தீன் ஷேக்கை கொலைச்செய்ய சதித்திட்டம் தீட்டியதாக சுதாஸமா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சி.பி.ஐ டி/.ஐ.ஜி கந்தசாமி தெரிவித்தார்.

2005ல் இந்த போலி என்கவுண்டர் கொலை நடைபெற்றபொழுது சுதாஸமா குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்தார்.

ஜனவரி 12 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. அதன் பிறகு நடைபெற்ற முதல் கைது இதுவாகும். குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியை கொலைச்செய்ய திட்டமிட்டதாக பொய் குற்றஞ்சுமத்தி அப்பாவியான சொஹ்ரபுத்தீன் ஷேக்கை கடந்த 2005 ஆம் ஆண்டு குஜராத் போலீஸ் ஆந்திரமாநில போலீஸுடன் இணைந்து அநியாயமாக சுட்டுக்கொன்றனர்.

பின்னர் அவருடைய மனைவி கவ்சர் பீவியையும், இன்னொருவரையும் அக்கிரமமான முறையில் கொலைச் செய்தனர். குஜராத் கேடரில் டி.ஐ.ஜி வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், ராஜஸ்தான் கேடரில் எம்.என்.தினேஷ் ஆகியோருடன் குற்றவாளிகளான 11 போலீஸ்காரர்களும் தற்பொழுது சிறையில் உள்ளனர். குஜராத் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சி.பி.ஐ கடந்த பிப்ரவரியில் வழக்கை பதிவுச்செய்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷொஹ்ரபுத்தீன் போலி என்கவுண்டர்:குஜராத் ஐ.பி.எஸ் அதிகாரி கைது"

கருத்துரையிடுக