அவர்கள் ஏன் எனது கணவரை கொல்லவேண்டும்? அவர் ஒரு விவசாயி; நக்ஸல் இல்லை. சட்டீஷ்கரிலிருந்து நீதிக்கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு வந்த விதவையான மாதவி ஹுர்ரே என்ற பெண்மணி தெஹல்கா இதழுக்கு அளித்த பேட்டியில் எழுப்பிய கேள்விதான் இது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் அப்பெண்மணியின் கணவரான மட்வி தேவா, சிங்கன்வாடு கிராமத்தில் அமைந்துள்ள குடிசைக்கு திரும்பிய வேளையில் பாதுகாப்பு படையினர் அவரை துப்பாக்கியால் சுடுகின்றனர். குண்டு சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த மாதவி ஹுர்ரேவின் கண்ணில் தென்பட்டது நொறுங்கிப்போன அவரது கணவரது சைக்கிள். அக்கிராமத்தைச் சார்ந்த 3 பேர் சி.ஆர்.பி.எஃபின் கோப்ரா படையினர்தான் சுட்டதாக கூறினர்.
அவரது கணவரின் உடல் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தன.'அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்று தனது 3 குழந்தைகளில் ஒன்றை அணைத்தவாறு தெஹல்காவிடம் கூறினார் மாதவி ஹுர்ரே.
சட்டீஷ்கர் அரசுக்கெதிராக ரிட் மனுத்தாக்கல் செய்வதற்காக தானே டெல்லிக்கு வந்துள்ளார். அப்பெண்மணியின் விரல் அடையாளம் இடப்பட்ட ஆவணம் அவரிடம் உள்ளது. இதனை தெஹல்காவிடம் வழங்கினார். இந்த ஆவணத்தை அவரது கணவர் கொலைச் செய்யப்பட்ட அடுத்த மாதம் தண்டேவாடாவிலுள்ள ஆசிரமத்தில் வைத்து பல மனித உரிமை அமைப்புகள் அவரை சந்தித்த போதும் அளித்துள்ளார்.
ஆனால் ஏப்ரல் 19, 2010 அன்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய சோலிசிட்டர் ஜெனரல், "மாதவி என்பது கற்பனை கதாபாத்திரம். ஒருபோதும் அப்படி ஒரு நபர் இருந்தது இல்லை. புகார் எண் 9 ஒரு நபரே இல்லை" என்று கூறுகிறார்.
முன்னதாக,பசுமை வேட்டை தாக்குதலினால் (ஆப்ரேக்ஷன் கிரீன் ஹண்ட்) பாதிக்கப்பட்ட தப்பிப் பிழைத்த குடும்பத்தில் எஞ்சி இருக்கும் 16 புகார்தாரர்களையும், காவல்துறையின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்ட - கண் தெரியாத குருடர் கத்தியால் குத்தப்பட்டவரும், மார்பகம் அறுத்து எரியப்பட்ட 70 வயது நொண்டியான மூதாட்டியும் பாதுகாப்பாக உச்சநீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர்கள் எல்லோரையும் கண்டுபிடிக்க இயலவில்லை என்று அரசு கூறுகிறது.
சட்டிஸ்கரில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை? அதிர்ச்சியாக இருக்கிறது என்று நீதிபதி சுதர்ஸன் ரெட்டி மிகவும் சீற்றமடைந்தார். அவர் இந்த (மாதவி) படத்தை அவர் பார்த்தாரானால், மீண்டும் ஒரு முறை சீற்றமடையலாம்.
source:தெஹல்கா

0 கருத்துகள்: on "மாதவி ஹூர்ரே என்ற நபர் இல்லவே இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் அரசு எப்படி கோர இயலும்?"
கருத்துரையிடுக