7 ஏப்., 2010

ஷார்ஜாவில் லுங்கி அணியத்தடையா?

ஷார்ஜா:ஷார்ஜாவில் சில தினங்களுக்கு முன்பு பொது இடத்தில் லுங்கி அணிந்து சென்ற சில நபர்களை ஷார்ஜா போலீசார் கைதுச் செய்து விசாரணை மேற்க்கொண்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.இதுத் தொடர்பாக போலீசாரால் கைதுச் செய்யப்பட்ட நபர் கூறுகையில், "நான் பெட்ரோல் பங்கிற்க்கு லுங்கி அணிந்துச் சென்ற பொழுது போலீசார் என்னை தடுத்து நிறுத்தினர். லுங்கி அணிந்துக் கொண்டு பொது இடத்திற்கு வரக்கூடாது எனக்கூறினர்.

ஆனால் லுங்கி அணிவதால் உடல் உறுப்புகள் வெளியே தெரியாது. அணிபவர்களுக்கு இறுக்கமாக இல்லாமல் ஆசுவாசமாக இருக்கும். லுங்கி அணிய தடைச் செய்வதற்கு ஏதேனும் சட்டங்கள் இருக்கிறதா என்றுத் தெரியவில்லை. ஆனால் பல நபர்கள் தங்களது உடல் தெரியும் அளவிலான ஆடைகளை அணிந்துக் கொண்டு பொது இடத்திற்கு வருகின்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுப்பதில்லை ஏன்? நன்னடத்தைப் பற்றிய தெளிவான சட்டம்தான் என்ன?" எனக் கேட்கிறார்.

ஆனால் ஷார்ஜாவில் போலீஸ் நாகரீகமற்ற உடல் உறுப்புகள் வெளியித் தெரியும் ஆடைகளை பொது இடத்தில் அணிய அனுமதிப்பதில்லை. இதுத் தொடர்பாக அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "நாகரீகமாக நடந்துக் கொள்வதுத் தொடர்பான சட்டம் ஷார்ஜாவில் அமுல்படுத்தப்பட்டு 10 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் மக்கள் பொது இடத்தில் நாகரீகமான ஆடையை அணிய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்றார். ஆனால் லுங்கி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பதற்கு அவர் பதில் கூறவில்லை.

லுங்கியை இந்தியா, பாகிஸ்தான், மியான்மர் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை சார்ந்தோர் சாதரண ஆடையாக(casual) அணிந்து வருகின்றனர்.
source:Gulfnews

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஷார்ஜாவில் லுங்கி அணியத்தடையா?"

கருத்துரையிடுக