சென்னை:பிரபல பொருளாதார வல்லுநரும், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையாக கருதப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் நடைபெற்ற கருணா ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றும் பொழுது இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைப் பிரச்சனைக்கு தீர்வு இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் முறையினை நடைமுறைப்படுத்துவதாகும் எனக் குறிப்பிட்டார்.
'கருணா ரத்னா' விருதும் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் உரையாற்றுகையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் விதர்பாவில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலையில் ஈடுபடுவதுக் குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.
இது முடிவுறாத கொடூர பிரச்சனையாக மாறியுள்ளது என்றார். இதற்கு முக்கியக் காரணம் கடனுக்கு வசூலிக்கப்படும் அதிக அளவிலான வட்டியே என்றார் அவர். இப்பிரச்சனைக்கு தீர்வு வட்டியில்லாத இஸ்லாமிய வங்கியல் திட்டமாகும்.
"நேற்றுக்கூட 30 விவசாயிகள் விதர்பாவில் தற்கொலைச் செய்துக் கொண்டதாக செய்தி அறிந்தேன். இஸ்லாமிய வங்கியல்தான் இப்பிரச்சனைக்கு தீர்வாகும். ஏனெனில் அதில் வட்டியே கிடையாது." என்றார் அவர். பின்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் கருணா ரத்னா விருதை வழங்கினார்.
உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அமெரிக்கப் பருத்தி இறக்குமதி செய்யப் படுவதால் இந்திய விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக விவசாயத்தில் நஷ்டமடைந்ததாலும் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாததாலும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source:twocircles
0 கருத்துகள்: on "விவசாயிகள் தற்கொலைப் பிரச்சனைக்கு தீர்வு இஸ்லாமிய வங்கியியல்- எம்.எஸ்.சுவாமிநாதன்"
கருத்துரையிடுக