கொல்கத்தா:மாவோயிஸ்டுகளை எதிர்க்கொள்வது உள்ளிட்ட விவகாரங்களில் இஸ்ரேலின் உதவியை வலுப்படுத்துவதுக் குறித்த தகவல்கள் வந்துக்கொண்டிருக்கவே, மேற்குவங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா இஸ்ரேல் தூதர் மார்க் போஷருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒரு மணிநேரம் நீண்ட சந்திப்பிற்கு பிறகு உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மேற்குவங்காளத்துடனான ஒத்துழைப்பு வலுப்படுத்துவதன் அவசியத்தைக் குறித்துதான் பேச்சுவார்த்தையில் முக்கியமாக இடம்பெற்றதாக ஷோஃபர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இப்பேச்சுவார்த்தையைக் குறித்து புத்ததேவ் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
மேற்கு வங்க முதல்வருடனான சந்திப்பு நட்புறவின் அடிப்படையிலிருந்ததாகவும், தகவல் தொடர்பு, விவசாயம், சொட்டுநீர்பாசனம், சூரிய சக்தி ஆகியவைத் தொடர்பாகவும் பேசியதாகவும் ஷோஃபர் தெரிவித்தார். அதேவேளையில், மாவோயிஸ்டுகளை உள்ளிட்ட உள்நாட்டில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரை ஒடுக்க ஒத்துழைப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஷோஃபர், அதைக்குறித்து பேசவில்லை எனவும், இவை பத்திரிகைகள் உருவாக்கிய கதை எனவும் அவர் பதிலளித்தார்.
உள்நாட்டு பாதுகாப்புத்தான் இருதரப்பும் எதிர்க்கொள்ளும் முக்கிய பிரச்சனை என்றும், இவ்விவகாரத்தில் மேற்குவங்காளத்திற்கு உதவ இயலும் என்பது தனது எதிர்பார்ப்பு என நேற்று முன்தினம் கொல்கத்தாவில் சேம்பர் ஆஃப் காமேர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரியின் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்பொழுது ஷோஃபர் தெரிவித்தார்.
இருநாடுகளுக்குமிடையே பொது-தனியார் நிறுவனங்கள் பரஸ்பரம் வியாபாரத் தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஷோஃபர் தெரிவித்திருந்தார். கஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் போராளிகளை ஒடுக்குவதற்கு இந்தியா இஸ்ரேலுடன் இணைந்து செயலாற்றியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இஸ்ரேல் உதவியை எதிர்பார்த்து மேற்குவங்காள முதல்வர்: தூதருடன் பேச்சுவார்த்தை"
கருத்துரையிடுக