கெய்ரோ:காஸ்ஸா உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை என்றும், ஃபலஸ்தீன மக்கள் இஸ்ரேலை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்றும் சர்வதேச அணுசக்தி கழகத்தின் முன்னாள் தலைவரான எல்பராதி தெரிவித்துள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை UPI இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.எதிர்ப்புப் போராட்டம்தான் ஃபலஸ்தீன் மக்களுக்கான வழியை திறக்கும். ஏனெனில் இஸ்ரேலுக்கு பலத்தின் மொழிதான் புரியும். எந்தவித பயனையும் தராத பேச்சுவார்த்தை முட்டாள் தனமானது. அரபுக்கள் தங்களது பேச்சுவார்த்தை திட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என்றுக்கூறிய எல்பராதி எகிப்து அரசு காஸ்ஸா முனையின் எல்லையில் கட்டிவரும் ஸ்டீல் சுவர் பற்றி கடுமையாக விமர்சித்தார். இச்சுவர் ஃபலஸ்தீனமக்கள் தொடர்ந்து வாழ்வதற்கு ஏற்படுத்திய தடங்கலாகும். இது எகிப்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்றார். எகிப்து ஸ்டீல் சுவரை எழுப்பி இஸ்ரேலுடன் இணைந்து காஸ்ஸாவின் எல்லையை மூடிவிட நாடுகிறது. இதனால் காஸ்ஸா உலகின் மிகப்பெரிய சிறைச்சாலையாக மாறும். இந்தப்பிரச்சனைக்கு தர்க்கரீதியான தீர்வு சுரங்கங்களை மூடிவிட்டு எல்லைப் புறங்களுக்கு கடந்துச்செல்ல அனுமதிக்க வேண்டும்.
ரஃபாவை சுதந்திர வர்த்தக மண்டலமாக மாற்றி ஃபலஸ்தீனர்கள் வியாபாரத்தில் ஈடுபடவும், காஸ்ஸாவுக்கு திரும்பும் வகையிலும் அமையவேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக இஸ்ரேல் நொண்டிச் சாக்குப் போக்குகளைக் கூறி காஸ்ஸாவிற்கு ஏற்படுத்திய தடையால் 1.5 மில்லியன் காஸ்ஸா மக்கள் பட்டினியை நோக்கிச் செல்கிறார்கள். காஸ்ஸா உலகின் இதரபகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எல்பராதி கூறியுள்ளார்.
67 எல்ராபதி வயதான வருகிற 2011 ஆம் ஆண்டிற்கான எகிப்தின் அதிபர் தேர்தலில் போட்டியிட பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறார். ஜனநாயக சீர்திருத்தங்களைச் செய்ய எகிப்திய எதிர்க்கட்சிகள் எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
செய்தி:presstv
செய்தி:presstv

0 கருத்துகள்: on "காஸ்ஸாதான் உலகின் மிகப்பெரிய சிறைச்சாலை- எல்பராதி"
கருத்துரையிடுக