ஈரானின் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக மறைமுகமாக யு.எஸ் அதிபர் ஒபாமா மிரட்டல் விடுவதாக ஐ.நாவிடம் ஈரான் முறைப்படி புகார் அளிக்க உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
290 உறுப்பினர்களை கொண்ட ஈரான் பார்லிமென்ட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அரசுக்கு ஆதரவாக 250 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
கடந்த வாரம், ஒபாமாவின் அமெரிக்க அரசு, தாங்கள் ஈரான், கொரியா போன்ற அணுஆயுதம் ஏந்திய நாடுகளை அணுஆயுதத்தை கொண்டு தாக்கலாம் என்பது போன்ற சட்டதை இயற்றியது.
என்.பி.டி என்ற உடன்படிக்கையின் படி, ஈரான் அணுஆயுதத்தை மக்களின் அடிப்படை தேவைகளுக்காகத்தான் பயன்படுத்துகிறது. இதனை, ஐ.நா குழுவும் உறுதி செய்தது மட்டுமல்லாமல் ஈரான் அணுஆயுதங்களை ராணுவ தேவைகளுக்காக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டையும் நிராகரித்தது.
யு.எஸ்வுடன் சேர்ந்து, மத்திய கிழக்கில் அணுஆயுதத்தை கொண்ட ஒரே நாடு என்று கருதப்படும் இஸ்ரேலும் அவ்வப்போது, ஈரானின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல்விடுகிறது. எனவே, இந்த புகாரை ஈரானின் சட்ட வல்லுனர்கள் அரசுக்கு தெரிவித்ததாகவும், மத்திய கிழக்கு பகுதியின் அமைதியை சீர்குலைக்க முயலும் அமெரிக்காவின் நிர்வாகத்தை ஈரான் இந்த புகார் மூலம் எச்சரிக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.
source:Presstv

0 கருத்துகள்: on "யு.எஸ்சின் மிரட்டல்களை ஐ.நாவிடம் புகார் செய்கிறது ஈரான்"
கருத்துரையிடுக