புதுதில்லி:மக்கள் தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றனவா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்.சி., எஸ்.டி. குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவது போல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்த விவரங்களையும் சேகரிக்க உத்தரவிடக் கோரி நாகபுரியைச் சேர்ந்த ஓர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்துக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
source:dinamani

0 கருத்துகள்: on "மக்கள் தொகை கணக்கெடுப்பு: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி"
கருத்துரையிடுக