வாஷிங்டன்:ஈரான் மீது மேலும் புதிதாக பொருளாதார தடை விதிப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசும் போது இந்தியாவின் நிலையை பிரதமர் மன்மோகன் சிங் விளக்கியுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உத்தேசித்துள்ள பொருளாதார தடைகள் அந்நாட்டில் வாழும் சாதாரண ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதிக்கும். எனவே அதை இந்தியா ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கொண்டு வந்ததீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து ஒபாமா இந்திய பிரதமரிடம் தெரிவித்தபோது இக்கருத்தை மன்மோகன் வெளியிட்டதாக வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார்.
அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடுவதில் இந்தியாவுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளதாக ஒபாமாவிடம் பிரதமர் விளக்கியதாகத் தெரிகிறது.
சாதாரண மக்களைப் பாதிக்கும் எந்த ஒரு தடை விதிப்பும் எப்போதுமே எதிர்விளைவை உருவாக்கும் என மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இந்த விஷயம் குறித்து தொடர்ந்து விவாதிக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக நிருபமா ராவ் கூறினார்.
source:dinamani

0 கருத்துகள்: on "ஈரான் மீது புதிய தடை: இந்தியா எதிர்ப்பு"
கருத்துரையிடுக