ஸ்ரீநகர்:இரண்டு வார விடுமுறையை குதூகலமாகக் கொண்டாட டெல்லியை நோக்கிச் செல்லும் பொழுது அந்த 15 வயது மக்பூல்ஷா ஒருபோதும் கருதியிருக்கமாட்டார் இனி 14 ஆண்டுகளுக்கு பின்னரே தனது குடும்பத்தினரை காண இயலும் என்று.
1996 ஆம் ஆண்டு லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட மக்பூலை கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி நீதிமன்றம் குற்றமற்றவர் என விடுதலைச்செய்தது.
ஆனால், சிறை வாழ்வின் போது இழந்த தனது தந்தை மற்றும் சகோதரியின் பிரிவால் மக்பூலுக்கு சிறை விடுதலையின் மகிழ்ச்சியை பூரணமாக அடையமுடியவில்லை.
ஸ்ரீநகரில் உள்ள லால்பஸாரில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு சென்ற மக்பூல் நேராகச் சென்றது தனது தந்தை மற்றும் சகோதரியின் கப்றுஸ்தான்களுக்கு. இருவருடைய கப்றுகளையும் கட்டி அனைத்து கண்ணீர் விட்டு அழுதார் மக்பூல்.
சிறையிலிருந்த பொழுது தனக்கு பிறந்த பிள்ளைகளையும், இதர குடும்பத்தினரையும் சகோதரன் செய்யத் ஹஸ்ஸன் ஷா மக்பூலுக்கு அறிமுகப்படுத்தினார். மக்பூல் கைதுச் செய்யப்பட்டு ஒரு வருடம் கழிந்தபிறகு அவருடைய தந்தை செய்யத் முஹம்மது ஷா மரணித்தார். சகோதரி ஹதீஸா பானு கடந்த 2005 ஆம் ஆண்டு மக்பூலை சிறையில் சந்தித்துவிட்டு வந்தபிறகு சில மாதங்களுக்குள்ளாக மரணித்துவிட்டார். அவருக்கு வயது 24.
முதலில் திஹாரில் ஜுவனைல் சிறையில் அடைக்கப்பட்ட மக்பூலை இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் முக்கியச் சிறைக்கு மாற்றினர். ஆவணங்களை போலீஸ் கைப்பற்றியதால் டெல்லியில் நடைபெற்று வந்த வியாபாரத்தை மக்பூலின் குடும்பத்தினர் நிறுத்தவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
அதேவேளையில் நவ்பூரில் முஹம்மது ஷாஃபி கானை தூக்கமில்லாத இரவுகள் பின் தொடர்கின்றன. வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிகள் என அறிவித்த ஆறுபேரில் ஷாஃபிகானின் மகன் ஃபாரூக் அஹ்மதும் உட்படுவார். ஃபாரூக்கை தொலைபேசியில் அழைத்தபொழுது வியாபாரம் தொடர்பாக அவன் துபாய்க்கு செல்வதாகத்தான் கருதியிருந்தோம். ஆனால் நேபாளுக்கு சென்று திரும்பி வரும்பொழுது டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு கைதுச் செய்தது.
குடும்பத்தின் ஒரே அச்சாணியாகயிருந்த ஃபாரூக்கிற்கு எந்த தீவிரவாத இயக்கங்களுடனும் தொடர்பில்லை என்கிறார் ஷாஃபிகான்.
1996 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி லஜ்பத் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரில் 6 பேருக்கு எதிராக நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி குற்றத்தை சுமத்தியது. இவர்கள் கஷ்மீர் இஸ்லாமிக் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் என்று போலீஸ் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "14 வருட சிறைவாசத்திற்கு பிறகு குற்றமற்றவர் என மக்பூலை விடுதலை செய்தது நீதிமன்றம்"
கருத்துரையிடுக