துபாய்:செச்னிய கமாண்டர் சுலீம் எமதயேவை துபாயில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் இரண்டு பேருக்கு துபாய் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
செச்னியா அதிபர் ரம்ஸான் கதிரோவின் எதிரியாகக் கருதப்படும் இவரை துபாயில் அவர் வசிப்பிடத்தின் கார் பார்க்கிங்கில் வைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
செச்னியா பாதுகாப்புப் படையின் எலைட் பட்டாலியன் பிரிவில் கமாண்டராக இருந்தவர் எமதயேவ்.குற்றவாளிகளான தாஜிகிஸ்தானைச் சார்ந்த மக்சூத் ஜான் அஸ்மதோவ்கும், ஈரானைச் சார்ந்த க்ளார்க் மெஹ்திக்கும் துபாயின் முதல்நிலை நீதிமன்றத்தின் நீதிபதி அப்துல் லத்தீஃப் அப்துல் ஜவ்வாதின் பெஞ்ச் ஆயுள்தண்டனையை வழங்கியது.
எமதயேவின் கொலைக்குப் பின்னணியில் செச்னியா துணை பிரதமர் ஆதம் டெலிம்கனோவ் என்று கருதப்படுகிறது. கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி செச்னிய துணைபிரதமரின் பாதுகாப்பு அதிகாரியுடையது என துபாய் போலீஸ் கண்டுபிடித்திருந்தது.
கொலைச் செய்யப்படுவதற்கு நான்கு மாதம் முன்புதான் எமதேயேவ் துபாய்க்கு வசிப்பிடத்தை மாற்றியிருந்தார். அதற்கு முன்பும் அவரைக் கொலைச்செய்ய முயற்சி நடந்திருந்தது.
கடந்த ஆண்டு எமதேயேவின் கொலைக்குப் பின்னணியில் செயல்பட்ட 7 ரஷ்யர்களுக்கெதிராக இண்டர்போல் கைது வாரண்ட் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எமதேயேவின் சகோதரர் ரஸ்லான் மாஸ்கோவில் வைத்து கொலைச் செய்யப்பட்டார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "செச்னியா கமாண்டரைக் கொன்ற குற்றவாளிகளுக்கு துபாயில் ஆயுள் தண்டனை"
கருத்துரையிடுக