வாஷிங்டன்:உலக மக்களின் கற்பனைகளுக்கு உயிரோட்டம் அளித்த தங்களின் வருகைக்காக இந்திய மக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றார்கள் என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் தெரிவித்தார்.
அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்ள சென்ற மன்மோகன்சிங் நேற்று முன்தினம் ஒபாமாவோடு நடந்த சந்திப்பில் அவருக்கு அழைப்புவிடுக்கும் பொழுது இதனை தெரிவித்தார்.
இந்த வருடம் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகைத் தருவார் என்று எதிர்பார்ப்பதாகவும், ஆனால் தேதி முடிவாகவில்லை என்றும் அமெரிக்கா சென்றுள்ள பிரதமரின் குழுவில் இடம்பெற்றுள்ள வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஒபாமாவிற்காக இந்திய குடிமக்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்- மன்மோகன்சிங்"
கருத்துரையிடுக