வாஷிங்டன்:'சவுத் பார்க்' என்ற கார்ட்டூன் சீரியலில் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் குறித்து அவதூறான காட்சி அமைத்த தயாரிப்பாளர்களுக்கு முஸ்லிம் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து சீரியலை தணிக்கைக்குட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
'சவுத் பார்க்' கார்ட்டூன் சீரியலில் முஹம்மது நபி எனக்குறிப்பிட்டு ஒரு கார்ட்டூன் கரடி வேடத்தில் வரும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது (நவூது பில்லாஹ்). இக்கார்ட்டூன் சீரியலை காமெடி சென்ட்ரல் நிறுவனத்திற்காக மாட் ஸ்டோனும், ட்ரே பார்க்கரும் தயாரித்துள்ளனர்.
200-வது பாகத்தில்தான் இந்த அவதூறான காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து ரெவலூஸன் முஸ்லிம் என்ற அமெரிக்க அமைப்பு ஒன்று இணையதளம் மூலம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அடுத்த பாகத்தில் அதனை நீக்கினர்.
நபியை அவமதிப்பது தொடர்ந்தால் கனத்த பதிலடியை ஏற்படும் என அபூதல்ஹா அல் அம்ரீக்கியின் பெயரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கார்ட்டூனில் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் குறித்த அவதூறு தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை"
கருத்துரையிடுக