டெல்லியில் மேலும் இரு கதிர்வீச்சு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கதிர்வீச்சு பாதிப்புகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.
டெல்லியிலுள்ள மாயாபுரி பழைய இரும்பு மார்க்கெட் பகுதியில் கோபால்ட்-60 எனப்படும் தனிமத்தின் கதிர்வீச்சு பாதிப்புகள் இருப்பதை இந்திய அணுசக்தித் துறைநிபுணர்கள் கடந்த வாரம் கண்டறிந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இப்பகுதியில் மேலும் இரு கதிர்வீச்சு பாதிப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கதிர்வீச்சுகளும் கோபால்ட்-60 மூலமாகவே ஏற்பட்டுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பழைய இரும்பு பொருள்களிலிருந்து எஞ்சியத் துகள்களில் இந்த கதிர்வீச்சு தனிமம் இருந்திருக்கக் கூடும். இதன் காரணமாகவே கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கதிர்வீச்சுத் தாக்குதல்களால் இதுவரை 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து கதிர்வீச்சு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது இப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
source:dinamai
0 கருத்துகள்: on "டெல்லியில் மேலும் இரண்டு கதிர்வீச்சு"
கருத்துரையிடுக