திருவனந்தபுரம்:கேரளத்தில் விமானத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது தொடர்பாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்)வீரர்கள் 2 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். கேரள விமான நிலையத்தில் கடந்த மார்ச் 21-ம் தேதி கிங்ஃபிஷருக்கு சொந்தமான விமானத்தின், பொருள்கள் வைக்கும் இடத்திலிருந்து வெடிகுண்டு கைப்பற்றப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எப் முன்னாள் வீரரும் ஹரித்துவார் மித்ரா மண்டல் என்ற ஹிந்துத்துவா அமைப்பான் உறுப்பினரான ராஜசேகரன் நாயர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் நான் தான் விமானத்தில் வெடிபொருள்களை வைத்தேன் என அவர் ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் பயணிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எப் வீரர்களின் கவனக்குறைவு காரணமாகவே வெடிகுண்டுகள் விமான நிலையத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பாக அப்போது பணியில் இருந்த 2 வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்: on "கிங்ஃபிஷர் விமானத்தில் வெடிகுண்டு: பயணிகள் சோதனையில் ஈடுபட்டிருந்த இரண்டு சிஐஎஸ்எப் வீரர்கள் சஸ்பெண்ட்"
கருத்துரையிடுக