இஸ்லாமாபாத்:ஒழுக்கங்கெட்ட காட்சிகளை ஒளிபரப்பும் இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை தடைச்செய்ய பாகிஸ்தான் பாராளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
தேசிய அவையின் தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்பு கமிட்டிதான் இந்திய தொலைக்காட்சி சானல்களை தடைச்செய்ய பரிந்துரைத்துள்ளது.
இக்கமிட்டியின் தலைவர் பேகம் பீலியம் ஹஸ்னைன் இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பரிந்துரைத்துள்ளார்.
இந்தியத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் ஆபாசக் காட்சிகளிலிருந்து இளையதலைமுறையை பாதுகாக்கவேண்டியுள்ளது என ஹஸ்னைன் கூறினார். இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்பும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒளிபரப்புவதற்கு தடைவிதிக்க பாகிஸ்தான் நடவடிக்கை"
கருத்துரையிடுக