20 ஏப்., 2010

அமெரிக்கா அணுஆயுத குற்றவாளி: ஈரான்

தெஹ்ரான்:ஈரானின் அதியுயர் மதத்தலைவர் ஆயத்துல்லா அலி ஹொமைனி அமெரிக்காவை அணுவாயுதக் குற்றவாளியாக முத்திரை குத்தியுள்ளார்.

தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற அணுவாயுத ஒழிப்பு குறித்த மாநாட்டில் ஹொமைனியின் செய்தி வாசிக்கப்பட்ட போது இத் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், அணுவாயுதப் பயன்பாடு மதத்தால் தடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை அணுவாயுத ஒழிப்பை மேற்பார்வையிட சுயேட்சையான அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமென அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார்.

அணுவாயுதக் குற்றத்தை இழைத்த ஒரேயொரு நாடு அமெரிக்கா மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ள ஹொமைனி, அணுவாயுதப் பரவலுக்கெதிராக அமெரிக்கா தீவிரமாகக் குரல் கொடுத்துவரும் நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் அந்நாடு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும எடுக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அணுவாயுதப் பயன்பாடு இஸ்லாமிய மதச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டதொன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அணுவாயுதப் பலத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் தமது அணு நிகழ்ச்சித் திட்டத்தை இடைநிறுத்த வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள அஹமதி நிஜாத், அணுவாயுத ஒழிப்பை மேற்பார்வையிட சுயேட்சையான சர்வதேச அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட புதிய அணுவாயுதக் கொள்கையை விமர்ச்சித்துள்ள ஈரான் இது தமக்கெதிரான அணுவாயுதம் பயன்படுத்தப்படுவதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதுகிறது.

வாஷிங்டனில் கடந்த வாரம் நடைபெற்ற அணுவாயுதப் பாதுகாப்பு மாநாட்டிற்கு ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
source:BBC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்கா அணுஆயுத குற்றவாளி: ஈரான்"

கருத்துரையிடுக