21 ஏப்., 2010

அரைகுறை ஆடைகளை அணிவதாலும் கண்மூடித்தனமான உறவுகள் வைப்பதனாலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன - ஈரான் உலமா

பெண்கள் அறைகுறையாக அணியும் ஆடைகள், மார்க்கத்திற்கு புறம்பான வகையில் கண்மூடித்தனமாக ஆண்களிடம் உறவுகளை பேணும் பெண்களினால் தான் பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்று ஈரான் நாட்டின் மூத்த உலமா ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஈரான் அதிபர் அஹ்மத்நிஜாத், மிகப்பெரிய பூகம்பம் ஒன்று விரைவில் தெஹரானை தாக்கவுள்ளது, அதனால் தெஹ்ரானில் வாழும் 12 மில்லியன் மக்கள் தங்கள் வசிப்பிடத்தை மாற்றுமாறு கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை குத்பாவில் உரையாற்றிய இந்த உலமா, நிறைய பெண்கள் அடக்கமாக ஆடைகளை அணிவதில்லை. இது ஆண்களை வழிதவறச் செய்கிறது, தங்கள் மானத்தை காப்பாற்ற தவறிவிட்டார்கள், விபச்சாரத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் இன்றைய நாட்களில் பூகம்பங்கள் போன்ற இயற்க்கை சீற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன என்றார்.

ஈரானிய இஸ்லாமிய நாட்டில் வாழும் பெண்கள் தங்கள் ஆடைகளை தலையிலிருந்து பாதம்வரை மறைத்திருக்க வேண்டும். ஆனால் நிறைய பெண்கள் குறிப்பாக இளைஞிகள் இஸ்லாத்தை பின்பற்றுவதில்லை என்றும், மிகவும் இறுக்கமான ஆடைகளை அவர்கள் அணிவதாகவும், தலைஅணிகள் பாதி இழுத்தபடி அனைத்து உரோமங்களை காட்டும் படி நடப்பதால் இறைவனின் கோபப்பார்வையினால் பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்றார்.

மண்ணிற்குள் புதைவதில் இருந்து நாம் எப்படி தப்ப முடியும்? இறைவனிடம் மன்னிப்பு கேட்டு தஞ்சம் அடைவதும் , இஸ்லாமிய முறைப்படி நம் வாழ்க்கையை அமைப்பதும் தவிற வேறு எந்த வழியும் இல்லை என்றார் அந்த உலமா.

ஒரு உயர்ந்த பண்டிதர் எனக்கு சொல்லி இருந்தார், மக்கள் அனைவரும் தம்மை படைத்தவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் நம்மை நெருங்குகின்றன என்று! தெஹ்ரானை ஒரு பூகம்பம் தாக்கும் பட்சத்தில் இறைவனின் அருள் மட்டும்தான் அதை எதிர்கொள்ள உதவும், ஆதலால் நாம் நம் இறைவனை ஏமாற்றமடையச் செய்ய வேண்டாம் என்று தன் ஜும்மா உரையை முடித்தார் காஸிம் சேதுகி என்ற அந்த உலமா.

ஈரானின் ஒரு அமைச்சர் கூறுகையில், மன்னிப்பும் இறைவனை துதி செய்வதும் தான் இது போல பூகம்பங்களை சமாளிக்கும் சூத்திரமாகும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் நம்மால் பூகம்பத்தை நிறுத்த எந்த ஒரு கருவியையும் உருவாக்க முடியாது. மாறாக அது இறைவனின் சட்டகம், அதிலிருந்து தப்பிக்க இறைவனை வணங்க வேண்டும், பாவங்களை தவிர்க்க வேண்டும், பாவ மன்னிப்பை கோர வேண்டும், தருமம் செய்ய வேண்டும் மற்றும் தன்னை சுயமாக இறைவனின் பாதையில் அர்ப்பணிக்க வேண்டும் என்றார் மஹ்ஸூலி.

முன்னதாக, பெரிய வகையான பூகம்பம் ஒன்று தாக்கவுள்ளதாக ஆராய்ச்சி நிபுனர்கள் அரசிற்கு எச்சரிகை விடுத்திருந்தனர். 2003ஆம் ஆண்டில், ஈரானின் பாம் என்ற இடத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 31,000 உயிர்கள் மாண்டன. பாமின் ஜனத்தொகையின் கால்வாசி தொகை அது. பழைய கலாச்சார சின்னங்கள் அனைத்தும் அளிந்தன.
source:Times Of India

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அரைகுறை ஆடைகளை அணிவதாலும் கண்மூடித்தனமான உறவுகள் வைப்பதனாலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன - ஈரான் உலமா"

கருத்துரையிடுக